More than a Blog Aggregator

Wednesday, 11 May 2011

நயன்தாரா திருமணம் நடக்குமா? சிம்பு பரபரப்பு பேட்டி !


சிம்பு ஒஸ்தி  என்ற படத்தில் நடிக்கிறார். தரணி இயக்குகிறார். இந்தியில் சல்மான்கான் நடித்து ரிலீசான “டபாங்” படத்தின் ரீமேக்கே இப்படம். ஒஸ்தி பட பூஜை ஏ.வி.எம். ஸ்டூடியோவில் இன்று காலை நடந்தது. சிம்பு இதில் பங்கேற்றார். நடிகர் ஜித்தன் ரமேஷ், நடிகை ரேவதி, இயக்குனர் தரணி, ஒளிப்பதிவாளர் கோபிநாத், தயாரிப்பாளர் ரமேஷ் ஆகியோர் பங்கேற்றனர்.
 
நிகழ்ச்சியில் சிம்பு நிருபர்களிடம் கூறியதாவது:-
 
ஒஸ்தி படத்தில் நான் போலீஸ் அதிகாரியாக நடிக்கிறேன். “வானம்” வெற்றி பெற்றுள்ளது. இதற்காக ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் என்றார். அப்போது உங்கள் பழைய காதலி நயன்தாராவுக்கு விரைவில் திருமணம் நடக்க உள்ளதே? என்று கேட்கப்பட்டது.
 
அதற்கு பதில் அளித்து சிம்பு கூறும்போது, பத்திரிகைகளில்தான் அது போன்று செய்திகள் வருகின்றன. திருமணம் நடக்கட்டும். அப்புறம் பார்க்கலாம் என்றார். மேலும் அவர் கூறும் போது, எனக்கு இப்போது திருமணம் இல்லை. தங்கை திருமணம் முடிந்த பிறகுதான் அதுபற்றி சிந்திப்பேன். எனக்கு ஏற்ற பெண்ணாக பார்த்து திருமணம் செய்து கொள்வேன். அது காதல் கல்யாணமாகவும் இருக்கலாம் என்றார்.

No comments:

Post a Comment