தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனை நோர்வேக்கு அழைத்துச் சென்று அடைக்கலம் வழங்கவே நோர்வே விரும்பியது என தேசப்பற்றுள்ள தேசிய இயக்கத்தின் தலைவர் குணதாச அமரசேகர தெரிவித்துள்ளார். கொழும்பிலுள்ள நோர்வே தூதரகம் விடுதலைப்புலிகள் அமைப்பைச் சேர்ந்த 12 பேருக்கு அடைக்கலம் வழங்கியுள்ளது என்பது ஆச்சரியமான ஒரு விடயம் அல்ல எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
ஏனெனில் போர் நடைபெற்ற காலத்தில் கொழும்பில் உள்ள நோர்வே தூதரகம் விடுதலைப்புலிகளின் அலுவலகம் போலவே செயற்பட்டுவந்தது. நோர்வே தூதரகம் விடுதலைப்புலிகளுடன் நெருங்கிய தொடர்புகளை பேணி வந்திருந்தது. அமைதி முயற்சிகளின் அனுசரணையாளர்கள் போல நோர்வே செயற்பட்டாலும், அவர்களின் நடவடிக்கைகள் முற்றிலும் மாறுபட்டது.
பிரபாகரனையும் தமது நாட்டுக்கு அழைத்துச் சென்று அடைக்கலம் வழங்கவே நோர்வே விரும்பியது. ஆனால் தற்போது விடுதலைப்புலிகளின் முக்கிய உறுப்பினர்களை அது பாதுகாத்து வருகின்றது என குணதாச அமரசேகர மேலும் தெரிவித்துள்ளார்.

No comments:
Post a Comment