More than a Blog Aggregator

Monday, 23 May 2011

வயாகரா சாப்பிட்டால் காது செவிடாகும்: அதிர்ச்சி தகவல் !


ear-20-05-11
“செக்ஸ்” வீரியம் மற்றும் ஆண்மைக் குறைவு போன்ற காரணங்களுக்காக “வயாகரா” மாத்திரையை சில ஆண்கள் பயன்படுத்தி வருகின்றனர். இதன் மூலம் “செக்ஸ்” உணர்ச்சி தூண்டப்படும் அதே வேளையில் பக்க விளைவுகள் ஏற்படுவதாக தற்போது தெரியவந்துள்ளது.

குறிப்பாக, “வயாகரா” மாத்திரைகளை பயன்படுத்துபவர்களின் காது கேட்கும் திறன் படிப்படியாக குறைகிறது. பின்னர் காது முழுவதும் கேட்காமல் செவிடாகும் நிலை உருவாகிறது.

இத்தகவலை அமெரிக்க விஞ்ஞானிகள் நடத்திய ஆய்வின் மூலம் தெரிய வந்துள்ளது. எனவே, வயாகரா மாத்திரைகளை பயன்படுத்த வேண்டாம் என நிபுணர்கள் அறிவுறுத்தி உள்ளனர்.

வயாகரா மாத்திரையில் காதுகள் செவிடாவது அமெரிக்காவில் மட்டுமின்றி, இங்கிலாந்து உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகள், கிழக்கு ஆசியா மற்றும் ஆஸ்திரேலியாவிலும் கண்டறியப்பட்டு உள்ளது.

வயாகரா மாத்திரை பயன்படுத்த தொடங்கிய சிறிது நாளிலேயே செவிட்டு தன்மை ஏற்படுவது உறுதி செய்யப்படுகிறது.

No comments:

Post a Comment